அரிசி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே தனது நோக்கம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு அனைவரதும் ஆதரவு அவசியம் என அவர் கூறியுள்ளார்.

நாளாந்த உணவுக்காக ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியாமல் பலர் உள்ளனர். முதலில் அவர்களுக்கு சாப்பிட்ட கொடுப்போம். அந்த மக்கள் தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.

மஹிந்த ஜனாதிபதியாக இருந்த போதும் நாங்கள் அதனை தான் செய்தோம். முதலில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே முக்கியமாக நான் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.