கடந்த 24 மணி நேரத்தில் மிகக் குறைந்த மரணங்களின் எண்ணிக்கையை எட்டிய பிரித்தானியா…!!

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளதாக mirror.co.uk. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலந்தில் 204 பேரும், வேல்ஸில் 14 பேரும், வட அயர்லாந்தில் 6 பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,675 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணித்த 54 பேரில், 40 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 -79 வயதுக்கு உட்பட்ட 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும் வயது அடிப்படையில் உள்ளடங்குவதாக NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது.