வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 30 க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று

இன்று காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 30 க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று என்ஓசிபி மேலும் தெரிவித்துள்ளது.