புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – ஒரு பிள்ளையின் தாய் பலி!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதினால் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தலம் பொலிஸ் பிரிவை சேர்ந்த குருஹன்வில்லுவ பிரதேசத்தை சேர்ந்த வைரய்யா வசுமதி என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவன் மற்றும் பிள்ளையுடன மோட்டார் சைக்கிளில் முந்தலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்திற்கு கணவன் மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் தாய் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே பலியானார்.

டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.