ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையினால் 80 பேர் மாயம்

ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையினால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம் காரணமாக 42க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

காணாமல்போனோரைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. தற்போது வரையில், 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸாருடன், இராணுவமும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக இரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ரைன் நதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.