ஆறு மாதங்களாக யாழில் நடந்த அசிங்கம்…14 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இருவர் அதிரடியாகக் கைது..!!

யாழில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில், இது தொடர்பில் சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும், சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டமருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார்.சிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளதாகவும்,சிறுமி கர்ப்பிணி எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகின்றது. அறிக்கை கிடைத்ததும், சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.