ரஞ்சுலாவ பிரதேசத்தில் திடீரென தாழிறங்கிய நிலம்! வெளியேற்றப்பட்ட மக்கள்

கினிகத்ஹேன – ரஞ்சுலாவ பிரதேசத்திலுள்ள சந்தசிரிகம கிராமத்தில் திடீரென நிலம் தாழிறங்கியுள்ளதால் 13 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக மக்கள் குடியிருப்புகளில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது.

இந்த கிராமத்தை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணசரிவு ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவ்வாறான பாதிப்புகள் ஏற்படுமா என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.