யாழ். யுவதிக்கு பிரான்ஸில் கிடைத்த வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்றுள்ளார்.

பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.

பிரான்ஸ் சுகாதார சங்கம் , பிரான்ஸ் இயற்பியல் சங்கம் என்பன சிமி பிசிக்ஸ் (Chimie-Physique) என்ற அமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது, சுவஸ்திகா இந்திரஜித்துக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் காஇன் நொர்மன்டி (Caen Normandie) பல்கலைக்கழகத்தில் வேதியல் பிரிவில் முனைவர் ஆய்வு நடைபெற்றிருந்தது.

இதில் “அயன்களும் இலத்திரன்களும் மோதுவதால் ஏற்படும் கலங்களில் உருவாகும் நேரியல் ஐய்திரோகார்பன் கொத்துகளின் மூலக்கூறு வளர்ச்சி” என்ற ஆய்வை சுவஸ்திகா மேற்கொண்டிருந்தார்.

அது சிறந்த விஞ்ஞான ஆய்வாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவரின் கண்டுபிடிப்புக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.