யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர் நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.