அவித்த முட்டை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

முட்டை எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவாகவும், குறிப்பாக காலை உணவுக்காகவும், பெரும்பாலான உணவுகளின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

அதிலும் அவித்த முட்டை சாப்பிடுவது நல்லது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியபலன்களை வழங்குகின்றது. அந்தவகையில் அவித்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • முட்டை சாப்பிட்டு வருவதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது.
  • முட்டையில் கொலஸ்ட்ரால்  இருந்தாலும் இது உடல் எடையை அதிகரிக்க வைக்காது.
  •  முட்டையின் மஞ்சள் கரு லுடீன், ஜியாக்சந்தின் உள்ளதால் கண்ணின் கருவை பாதுகாத்து, கண் பார்வை தெளிவடைய செய்யும். கண் சம்பந்தமான வியாதிகளை போக்கும்.
  •  முட்டையில் உள்ள கோலைன் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்சிக்கும் உதவி புரியும்.
  • பாலுணர்ச்சி அதிகரிக்கும்.
  • நோய்வாய்ப்பட்ட வைத்திய சாலையில் இருப்பவர்களின் உடல் பலம் பெற முட்டை சாப்பிட்டு வரலாம்.
  • முட்டையில் கால்சியம் இருப்பதனால் எலும்புகள் வலு பெறும்.
  • வளரும் குழந்தைக்கு முட்டை கொடுப்பதனால் வளர்ச்சி துரிதமாகும்.
  • புரதசத்து குறைப்பாடு இருப்பவர்கள் அவசியம் 2 முட்டைகள் சாப்பிட்டு வருவது நல்லது.
  • கர்ப்பிணகள் பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதனால் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துயும், வளர்ச்சியை கொடுக்கும்.