உறங்குவதட்குமுன் முன் கிராம்பை வெந்நீரில் கலந்து குடித்து பாருங்க! இந்த நன்மைகள் எல்லாம் உண்டாகுமாம்!

பழங்காலத்தில் இருந்தே ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை பொருள் கிராம்பு தான்.

இன்றுவரை ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.

இதனை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உணவின் சுவையை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி இதில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதனை தூங்கும் முன் கிராம்பை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பயனை தருகின்றது.தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  • தற்போதைய தொற்று பரவும் காலகட்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கிராம்பு அத்தியாவசியமான பொருளாக உள்ளது. அதிலும் குறிப்பாக கல்லீரலை பாதிக்கக் கூடிய தொற்றிலிருந்து நம்மை காப்பதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இரவு தூங்கச் செல்லும் முன் இரண்டு கிராம்பை எடுத்து லேசான சுடுநீரில் போட்டு குடித்தால், காலையில் உங்களின் வயிற்றுக் கழிவுகள் முழுவதும் சுத்தமாகும்.
  • அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி ஏற்படுபவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.
  •   கிராம்பில் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. கிராம்பினை சாப்பிட்டால் அது நமக்கு ஏற்படும் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும். சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புடைய மூலிகையாக கிராம்பு செயல்படுகிறது.
  • தொண்டை மற்றும் பல் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது.
  •  ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை உடைய பொருளில் கிராம்பு முதன்மையானது. மசாலா பொருளான கிராம்பை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
  • அரை டம்ளர் தேங்காய்ப் பாலில் அரை டீஸ்பூன் கிராம்புத் தூளை கலந்து குடித்தால் போதும். இதனால் உடலில் உள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும்.