நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பலசாலியாக எப்போதும் இருக்கனுமா? அப்போ கட்டாயம் இதைபண்ணுங்க

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கும். இவை குறையும் போது உடலில் நோய்த்தொற்றுகள் எளிதாக தொற்றும்.

அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதிலும் தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதிலும் முக்கிய பங்கு உணவுக்கு உண்டு.

அந்தவகையில் ஆயுர்வேத முறையில் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

  • வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த உணவுகள், இலைகள், கீரைகள், வண்ண நிறங்கள் அடங்கிய பழங்கள், ப்ரக்கோலி, தக்காளி, எலுமிச்சை, காலிஃபள்வர், இனிப்பு உருளைக்கிழங்கு, கேப்சிகம், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா கிவி, விதைகள், கொட்டைகள், பருப்பு வகைகள் போன்றவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  •  உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், சூடான அல்லது குளிர்ந்த உணவு, உலர்ந்த அல்லது புளித்த உணவு போன்றவற்றை இயன்றவரை அதிகம் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
  •  தினசரி உணவில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் நச்சை குறைக்கவும் இது உதவும். மஞ்சளை பாதாம் பாலுடன் சேர்த்து குடிக்கலாம். காலை நேரத்தில் ஓட்ஸில் மஞ்சள் சேர்த்தும் குடிக்கலாம்.தினமும் நெல்லிக்காய் சாறு 15 மில்லி அளவு எடுத்துகொள்ளலாம்.
  • தவறாமல் உடற்பயிற்சி செய்வது உடலை கச்சிதமாக வைத்திருக்க உதவும். சைக்கிள் ஓட்டுவது, விறுவிறுப்பான நடைபயிற்சி,யோகா, நீச்சல், விளையாட்டு, ஜாகிங் போன்ற மிதமான பயிற்சிகளை செய்ய்லாம்.
  • குழந்தைகளுக்கு ஸ்வர்ணா வச்சா இந்த மூலிகையை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு வாய்வழியாக கொடுக்கலாம். வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை அளிப்பதோடு செரிமான சக்தியையும் மேம்படுத்துவதற்கு உதவும்.