திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (15)  12 மணித்தியால நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலையூற்று ,சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நாளை இடம்பெறாது.

திருகோணமலை – கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவினால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.