திடீரென உயிரிழந்த சிப்பாய்க்கு கொவிட் தொற்று உறுதி

கம்பளை மாவத்துர இராணுவ மொழி பயிற்சி வகுப்பில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

11ஆம் திகதி உயிரிழந்த இராணுவ சிப்பாய்க்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவை திணைக்களம் நேற்று உறுதி செய்துள்ளது.

இந்த மொழி பயிற்சி பாடசாலையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த இராணுவ வீரர் மயங்கி விழுந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

மதுஷங்க என்ற இந்த இராணுவ சிப்பாயின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மொழி பயிற்சி பாடசாலையில் ஏற்கனவே ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ பயிற்சி பாடசாலையில் தற்போது வரையில் இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 200 பேர் மொழி பயிற்சி பெற்று வருகின்றனர்.