முல்லைத்தீவு மாவட்டத்தில் 1519 ஆசிரியர்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டுள்ளார்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்விவலயம் , துணுக்காய் கல்வி வலையங்களைச் சேர்ந்த 1519 ஆசிரியர்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

முல்லை கல்வி வலயத்தினை சேர்ந்த 1119 ஆசிரியர்களுக்கும் துணுக்காய் கல்வி வலயத்தினை சேர்ந்த 400 ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 அகவைக்கு மேற்பட்ட முதியவர்கள் என 2310 பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கு படுத்தலில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில்வைத்து இந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதேவேளை தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஏனையவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.