யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 248 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 248 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 291 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அனைவரும் 18 தொடக்கம் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயிற்சி நிலை கடற்படையினராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.