இலங்கை உட்பட 3 நாடுகளுக்கான பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டது

தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட 3 நாடுகளுக்கான பயணத் தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் நீடித்துள்ளது.

இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான பயணத்தடையே நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 21 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை ஐக்கிய அரபு அமீரக பிரஜைகள், ஐக்கிய அரபு எமிரேட் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பொருந்தாது.