விரைவில் ஆரம்பிக்கப்படப் போகும் பாடசாலைகள்… ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்..!!

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல்களை கல்வியமைச்சு தயாரித்துள்ளது.இந்த வழிக்காட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர், இந்த வழிக்காட்டல்கள் தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.எவ்வாறாயினும் வழிக்காட்டல்கள் கிடைக்கும் வரை காத்திருக்காது, கை கழுவும் இடம், பிள்ளைகளின் உடல் உஷ்ணத்தை அளவிடும் வசதிகள், சுகவீனமான மாணவர்களை தங்க வைப்பதற்கான இடங்கள் என்பவற்றை தற்போதில் இருந்தே தயார்ப்படுத்துமாறு கல்வியமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இந்த வழிக்காட்டல்களை நடைமுறைப்படுத்த தேவையான கிருமி தொற்று நீக்கி போன்ற திரவங்கள் பற்றிய மதிப்பீடுகள் இரண்டாம் தவணை ஆரம்பமான பின்னர், பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட உள்ளது.மதிப்பீடுகளுக்கு அமைய அத்தியாவசியப் பொருட்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. யுனிசெப் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் இதற்கு அனுசரணை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.