இங்கிலாந்தில் உயிரைப் பறிக்கும் விஷத் தோட்டம் !

இங்கிலாந்தில் Northumberland பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றின் ஒருபகுதியில் உலகின் விஷம் வாய்ந்த செடிகளை தோட்டமாக அமைந்துள்ளதாகவும், இங்குள்ள செடிகளை நுகர்வதாலும், தொடுவதாலும் கூட பார்வையாளர்களுக்கு மரணம் நேரலாம் எனவும் கூறப்படுகிறது.


ஆனால், நிர்வாகிகளின் கண்காணிப்பில், பொதுமக்கள் இந்த விஷத் தோட்டத்தை பார்வையிடலாம் என கூறப்படுகின்றது. Alnwick பூந்தோட்டத்தின் ஒரு சிறிய பகுதியில் நூற்றுக்கணக்கான விஷ செடிகளை பராமரித்து வருகின்றனர்.

உலகின் மிக ஆபத்தான தோட்டம் என அறியப்படும் இங்கு இதற்கு முன்னர் பார்வையாளர்கள் பலர் மயக்கமிட்டு விழுந்துள்ளனர். அங்குள்ள குறிப்பிட்ட சில செடிகளை தொடுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பானது 7 ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என கூறப்படுகிறது.

பல விஷ செடிகளுக்கும் கண்ணைக்கவரும் பூக்கள் பூப்பதால், பார்வையாளர்கள் அங்கு செல்ல ஈரக்கப்படுகின்றனர். அத்துடன் விஷத் தோட்டத்தை பராமரிக்கும் ஊழியர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவச உடையுடனே தோட்டத்திற்குள் செல்கின்றனர்.

குறித்த விசித்திர தோட்டமானது Jane Percy என்ற பிரித்தானிய பெண் தொழிலதிபரின் திட்டமாகும். மேலும் இந்த தோட்டம் தொடர்பில் இவர் பல புத்தகங்களும் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.