நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்றும் இயற்கையான பானம் எப்படி தயாரிப்பது எண்டு பாப்போம்

நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது.

இதில் சளியின் தேக்கம் அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை விட ஆரோக்கியமான முறையில் சளியை அகற்றலாம்.

தேவையான பொருட்கள்

தேன் – 100 கிராம்
தண்ணீர் – 100 மிலி
எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
ஓட்ஸ் – 50 கிராம்

முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.

பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்,

இதனை 15 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.