மகனால் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி தாய்! – சம்பவ இடத்தில் பரபரப்பு

போதைக்கு அடிமையான மகனால் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயம் அடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை பாலதோட்டவில் வசிக்கும் அனுலா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி சமைத்துக்கொண்டிருந்த தாயை சந்தேகநபரான மகன் கோடரியால்அடித்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சந்தேக நபரின் மகன் கைது செய்யப்பட்டு ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.