மாபெரும் லொத்தர் குலுக்கலில் ஒரே இரவில் கோடீஸ்வராக மாறிய அதிர்ஷ்டசாலி..!! எப்படித் தெரியுமா?

கனடாவில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட லொட்டரி குலுக்கலில் நபர் ஒருவருக்கு $55 மில்லியன் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரொரன்ரோவில் தான் இந்த குலுக்கல் மே 2ஆம் திகதி இரவு நடந்துள்ளது.அதில் Yellowknife நகரில் வசிக்கும் யாரோ ஒருவருக்கு $55 மில்லியன் பரிசு விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை Western Canada Lottory Corporation வெளியிட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் தனது பரிசை வந்து கோரவில்லை.அதே போல இதே லொட்டரி குலுக்கலில் பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு $1 மில்லியன் ஆறுதல் பரிசு விழுந்துள்ளது.இந்தப் பரிசு பணத்தை பெறபோகும் அதிஷ்டசாலி குறித்தும் எந்தவொரு விபரமும் இன்னும் தெரியவில்லை.ஆனால், விரைவில் வெற்றியாளர் மற்றும் ஆறுதல் பரிசு பெறும் நபர் குறித்த விபரம் வெளியாகும் என தெரியவந்துள்ளது.