மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து தொடர்பில் வெளிவந்த தகவல்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு எதிர்வரும் கிழமை பெரும்பாலும் அனுமதி கிடைக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு கொரோனவை கட்டுப்படுத்தும் செயலணியினால் இதுவரை அனுமதி கிடைக்க வில்லை.

எனினும் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.