அம்பலங்கொட மோதர தேவாலய வளாகத்தில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி

அம்பலங்கொட மோதர தேவாலய வளாகத்தில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி காலை தேவாலயத்திற்கு வருகைத்தந்துள்ளார். இதன்போது குறித்த நபர் மயங்கி விழும் காட்சி சீசீடீவியில் பதிவாகியுள்ளது.

கீழே விழுந்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பில் பலபிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் ஹிக்கடுவ, மலவென்ன பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபராகும்.