இலங்கையில் இருந்து பிரான்ஸ் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிரான்ஸின் தேசிய விமான சேவையான எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

35 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் வரை தமது சேவையை விஸ்தரிக்க எயார் பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயார்பிரான்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு மூன்று முறை கொழும்பு வரை இந்த பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விமான சேவைகள் ஆரம்பிப்பதன் மூலம் பயண மற்றும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் அதே வேளையில், இலங்கைக்கும் நன்மைகள் கிடைக்கவுள்ளது.

இலங்கையில் ஐந்தாவது பெரிய சுற்றுலா மூல சந்தையாக பிரான்ஸ் திகழ்கின்றது. அதற்கமைய, 1980ஆம் ஆண்டு முதல் முறையாக கொழும்பு நோக்கி அதன் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 35 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது.