கொழும்பின் சில பகுதிகளில் நாளை முதல் நீர் வெட்டு – வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி தொடக்கம் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, 1,2,3,7,8,9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதேபோல், கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.