இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2021, அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2021, அக்டோபர் 4 முதல் அக்டோபர் 31 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.