இன்றைய ராசி பலன் – 9-7-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான பகை மேலும் வளராமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தோல்வியும் பாடமாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உங்கள் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோக பூர்வ முடிவுகள் சாதகமாக அமையும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புது புது வாய்ப்புகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கை தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடமிருந்து அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் பொழுதை கழிக்காமல் உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணப்புழக்கம் சீராக இருக்கும். வாடிக்கையாளர்கள் உங்களுடைய நாணயத்தை புரிந்து பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் உதவி கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளித்து வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகம் முகத்தில் தோற்றம் அளிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. உங்கள் திறமைகள் வெளி உலகிற்கு வெளிவரக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அவரவர் செய்வது உங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண முடியும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் தொலைதூர இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உத்யோகத்தில் உங்களுடைய சக பணியாளர்களின் மூலம் தேவையற்ற வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய செயல்பாடுகளில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்படும் அற்புதமான நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு உரிய பலன்களை காணக் கூடிய யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு மேலும் அதிகரிக்க முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய பாக்கியம் உண்டாகும். பிள்ளைப் பேறு வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் அமோகமான வெற்றியை காண கூடிய யோகம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பயிற்சிகள் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு நடுவே நடக்கும் சண்டை பிரச்சனைகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். குலதெய்வ வழிபாடு மேற்கொண்டு வர நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணப்புழக்கம் சீராக இருக்கும்.