திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்பு!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது. சாம்பல்தீவு- நான்காம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.