இன்றைய ராசி பலன் – 08-07-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது எதுவும் நிறைவேற மாட்டேன் என்கிறதே என்கிற மன வருத்தம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண வர்த்தக விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறைய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயநலமாக செயல்படாமல் பொதுநலமாக செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அரசு ரீதியான காரியங்களில் அனுகூல பலனை காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து விட்டு முடிவெடுங்கள். அப்படி நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக தொடங்கக் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் நீங்கள் உங்களுடைய பங்களிப்பை அதிகமாக செலுத்தி ஓயாத உழைப்பை கொடுப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அதுவும் ஒன்று நடக்கும். எனினும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்பொழுது வெற்றி உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நெடும் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். கூடுமானவரை பொது இடங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் நன்மைகள் நடைபெறும். கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகைகள் வந்து சேரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் சாதுர்யமான பேச்சு திறமையால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள். கூடுமானவரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையை கடைப்பிடிப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் பொது இடங்களில் உங்கள் உடைமை மீது கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் புதிதாக துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மற்றும் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த ஏதோ ஒரு விஷயம் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல நாளாக இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்படக் கூடியவை நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீட்டில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் நடக்கும்.

மீனம்

மீன் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி மகிழ்வு ஏற்படக் கூடிய நல்ல நாளாக இருக்கும். உங்களை விட்டு சென்ற சில உறவுகள் மீண்டும் அந்த வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.