அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரானா வைரஸ்..!! சென்னையில் மொத்த எண்ணிக்கை 3000 ஐயும் கடந்தது..!!

சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கிடையே சென்னையில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் 52வயதான பெண் பணியாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.