திருகோணமலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் திடீர் பதற்றம் – விரைந்து சென்ற வன ஜீவராசி திணைக்களம்

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மக்கள் குடியிருப்பு குதிக்குள் முதலை ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை 4ம் கட்டை சிங்ஹபுர பகுதியில் உள்ள வீடொன்றினுள் முதலை புகுந்ததால் அப்பகுதிவாசிகள் பதற்றமடைந்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் முதலை மீட்கப்பட்டது. நான்கு அடி நீளம் கொண்ட  முதலை ஆண்டான் குளம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.