இலங்கையில் நேற்றய தினம் மேலும் 5 பேர் கொவிட் தொற்றால் மரணம்

இலங்கையில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நேற்றைய தினம் (05) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களுள் 30 ஆண்களும், 15 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 2,67,149 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

x