இன்றைய ராசி பலன் – 07-07-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடலில் இருக்கும் சோர்வு அசதி அனைத்தும் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த சில கடமைகள் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த சங்கட நிலை மாறி நிம்மதி பிறக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விடை தெரியாத பல கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் தீர்க்கமாக முடிவு எடுக்கக் கூடிய வலிமை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற இடங்களில் உங்களுடைய பேச்சை உயர்த்துவது தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமயோசிதமாக பேசும் திறமை அதிகம் வெளிப்படும். உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட சில பொறுப்புகளை கவனத்துடன் கையாள்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய கூட்டாளிகளை இணைத்துக்கொள்ள திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத நல்ல ஒரு வரவேற்பு பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த தடை தாமதங்கள் அனைத்தும் விலகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னுடைய பலவீனம் அறிந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிகள் புதுவிதமான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட வேண்டிய நல்ல நாளாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிரடி மாற்றங்கள் மூலம் உற்சாகம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் கவனம் தேவை. தேவையற்ற நபர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் இனிமை கொள்வது அவசியமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படலாம் எனினும் பொறுமையுடன் காத்திருந்தால் நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அனுபவ பூர்வ முடிவுகள் சாதகமாக அமைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் சவாலான வேலைகளை எளிதாகச் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது ஆரோக்கியம் பலம் பெற உதவியாக இருக்கும்.