உறவினர்களுக்கு இடையிலான மோதல் வாள்வெட்டில் முடிந்தது…ஒருவர் ஸ்தலத்தில் பலி..!! யாழில் நடந்த கொடூரம்..!

மிருசுவில் கரும்பகத்தில்  உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.படுகாயமடைந்த இருவரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.