ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் திடீர் மரணம்

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜேர்மன் நாட்டவரின் மனைவியும் கோவிட் தொற்றுக்குள்ளாகிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கோவிட் தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றாளர் 102 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.