இந்த மங்களகரமான பொருட்களை நம்முடைய வீட்டில் இப்படி வைத்தால் கஷ்டங்கள் பிரச்சினைகள் வருமாம் .எனி அந்த பொருளை மறந்து போய் வச்சிடாதிங்க!

நமக்கு மங்களத்தையும் நன்மையையும் கொடுக்கக் கூடிய சில பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்தப் பொருட்களை நம்முடைய வீட்டில் எப்படி வைத்திருக்கின்றோம், என்பதில் தான் விஷயமே அடங்கியுள்ளது. இந்த பொருளின் மூலம் நமக்கு என்ன கெடுதல் நடந்து விடப்போகிறது! என்று நினைத்து, யாரும் செய்யாத விஷயங்களை நாம் செய்யவே கூடாது. அந்த வரிசையில் அழகிற்காக உங்களுடைய வீட்டில் இந்த இரண்டு செடிகளை வளர்த்து வந்தால், அதை தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள் வளர்க்க கூடாத இரண்டு செடிகளை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் வீட்டிற்குள் வளர்க்க கூடாத அந்த இரண்டு செடிகள் என்னென்ன என்பதை பார்த்துவிடுவோம். முதலாவது நவதானியங்களை தொட்டியில் போட்டு, அந்தச் செடியை வீட்டிற்குள் அழகிற்காக வைத்து வளர்க்கக் கூடாது. மங்களகரமான பொருட்களில் முதல் இடம் பிடிப்பது இந்த மஞ்சள் தான். மஞ்சள் கிழங்கை நாம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் கொத்தாக கூட வாங்கி நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒருபோதும் மஞ்சள் கிழங்கு செடியை நம்முடைய வீட்டில் மண்ணில் வளர்க்கவே கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. நவதானியம், மஞ்சள் இந்த இரண்டு பொருட்களும் நமக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய பொருட்கள் தான். இருப்பினும் இந்தச் செடிகள் நம் வீட்டில் வைத்து வளர்க்க கூடிய செடிகள் அல்ல. இதன் மூலம் என்ன பிரச்சினைகள் வரும். கணவன் மனைவிக்குள் சண்டை, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை, மன கசப்பான சம்பவங்கள் நடப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

இந்த ரெண்டு செடிகளை உங்கள் வீட்டிற்குள் வைத்து வளர்க்காதீர்கள். இந்த நவதானியங்களை, சில சாங்கியத்திற்க்காக மட்டும் சில வீடுகளில் மண் சட்டியில் போட்டு வளர்ப்பார்கள். அது சாங்கியத்திற்க்காக வளர்க்கப்படுவது. சில நாட்களுக்குப் பின்பு அதை அவர்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதே போல் உங்களுடைய வீட்டில் எப்போதுமே கணவன் மனைவிக்குள் பிரச்சனையாக உள்ளது. சந்தோஷமே இல்லை என்ற சூழ்நிலை நிலவி வந்தால், அந்த வீட்டிலிருக்கும் மனைவி, தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, இந்த அகல்விளக்கை மஞ்சள் நிற நட்சத்திர கோலத்தின் மேல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

அதாவது 2 நட்சத்திரக் கோலம் போட்டுக் கொள்ளுங்கள், மஞ்சள் பொடியில். அந்த கோலத்தின் மேல் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வரவேண்டும். முடிந்தவர்கள் மஞ்சள் நிறப் பூவை வைத்து இந்த தீபத்திற்கு அலங்காரம் செய்து மனதார முருக வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயமாக கணவன் மனைவிக்குள் இருக்கக் கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். முயற்சி செய்து பாருங்கள்.