இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வு! காரணம் என்ன?

தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதன் காரணமாக போலி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தங்களிடம் கைவசம் உள்ள தங்கத்தை பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஒரு பவுண் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்யும் அதிகாரம் இலங்கை வங்கிக்கு மட்டுமே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.