இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு!

இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எஹலியகொடை பத்பேரிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் மது ​போதையில் இருந்துள்ளனர்.

இதன்போது, ஒருவர் பொல்லு ஒன்றால் மற்றைய நபரை தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, தாக்கிய நபர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் 45 வயதுடையவர் எனவும், தற்கொலை செய்துக் கொண்ட நபர் 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.