பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தற்போது வெளிவந்த புதிய தகவல்

பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனினும், பாடசாலைகளிலும், வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், ஜூலை மாதம் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.