இலங்கையில் முக்கிய ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இதில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் போன்ற ஆபத்துக்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.