தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டால் உடல் எடை கடகடவென குறையுமாம்! முடி உதிர்வு நின்று, முடி வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய முடி உதிர்வை நிறுத்தக்கூடிய, உடல் எடையை குறைக்கக் கூடிய, ஒரு லட்டு ரெசிபியை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த லட்டுவை தினம்தோறும் 1 என்ற கணக்கில் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை மட்டும் தரக்கூடிய அந்த லட்டுவை எந்தெந்த பொருட்களை வைத்து எப்படி சுலபமாக செய்யலாம். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் இந்த லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்துவிடுவோம்.

கொள்ளு 1 கப்,

கருப்பு உளுந்து – 1/2 கப்

வேர்க்கடலை – 4 ஸ்பூன்

எள்ளு – 2 ஸ்பூன்

பொடி செய்த வெல்லம் – 1 கப்

ஏலக்காய் – 2

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

நெய் வாசம் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நன்றாக சூடு செய்து, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அந்த கடாயில் 1 கப் அளவு கொள்ளை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த கொள்ளை எடுத்து வாயில் போட்டு பார்த்தால், அந்த கொள்ளை கடித்து சாப்பிடும் அளவிற்கு பக்குவம் வர வேண்டும். அப்போதுதான் கொள்ளு சரியான பக்குவத்தில் வறுபட்டதாக அர்த்தம். கொள்ளை வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து ஒரு தனியாக தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். (கொள்ளு நன்றாக சரியான பக்குவத்தில் வறுபடவில்லை என்றால் மிக்சி ஜாரில் போட்டு அரைக்க முடியாது).

அதே கடாயில் அடுத்தபடியாக கருப்பு உளுந்தை சேர்த்து பொன்நிறம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து அதையும் கொள்ளு தட்டில் கொட்டி கொள்ள வேண்டும். அடுத்த படியாக வேர்கடலை, எள், ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் ஒவ்வொன்றாக வறுத்து ஒரே தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கொள்ளு, கறுப்பு உளுந்து, வேர்க்கடலை, எள்ளு ஏலக்காய் இந்த ஐந்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்தப் பொருளை தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். வறுத்து அரைத்த இந்த பொடியோடு நன்றாக பொடி செய்த வெல்லம், 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி உங்கள் கைகளைக் கொண்டு நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்து ஈரமில்லாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

தினமும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஒரே ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். தொடர்ந்து 48 நாட்கள் இதை சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும். ஆனால் இந்த லட்டு செய்து வைத்தால் 10 லிருந்து 15 நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும். அதன் பின்பு மீண்டும் நீங்கள் புதிய லட்டுவை செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ட்ரை பண்ணி பாருங்க. ஆரோக்கியமான இந்த டிப்ஸை யாரும் மிஸ் பண்ணாதீங்க.