இன்றைய ராசி பலன் – 05-07-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சாதகமற்ற அமைப்பு என்பதால் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை நீடிக்கும். தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க தியானம் போன்றவற்றை மேற்கொள்வது உத்தமம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டு வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் அனைத்தும் எதிர்த்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏதும் ஏற்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடந்தகால நினைவுகளை அசைபோட்டு பார்க்கக்கூடிய இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகமான பலன்களைக் காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிக் கொணர வேண்டிய தருணமாக அமையும். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கருத்துகளுக்கு பெரும்பாலானோர் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பகைவர்களுக்கு கூட மனம் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். குழப்பங்கள் தீர குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வந்த புதிய முயற்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பங்களிப்பை கூடுதலாக செலுத்தும் வாய்ப்புகள் உண்டாகும், இதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இங்கு நிறைய வளர்ச்சி மென்மேலும் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவு நிறைவேறும். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தியடைய செய்யும். ஆரோக்கியம் பலப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிலிருக்கும் பாரம் குறைய வாய்ப்புகள் உருவாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை கிடைக்கப் பெறுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதைத் தவிர்க்கவும். வெளியிட பயணங்களின் பொழுது அதிகம் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு ஏற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் செய்ய நினைக்கும் சாதனைகளுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.