சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதால் உடனே அறிவிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள்

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்றும் சிறுவர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கண்காணிக்கும் நிறுவனங்களுக்கு 15 வீதமான முறைப்பாடுகளே கிடைப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழ்நிலையில் வீடுகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றன.

இது பற்றிய தகவல்கள் உரிய வகையில் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார்.

சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை உரிய தரப்பிற்கு வழங்குமாறு சிறுவர் அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.