என் அன்புக் குழந்தையே…இது உங்கள் ஷீரடி சாய் பாபா..
ஏன் இந்த ஆவேசம் உன்னிடம் நீ சந்திக்கும் பிரச்சினைகளை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என நினைக்கிறாயா…? என்னை நினைத்தாலே உன் கண் முன்னர் தோன்றுவேன், நீ அழைக்கும் போது நான் உன்னிடத்தில் இல்லாமல் இருப்பேனா…?

உன் சூழ்நிலைகள் உன்னை நிலைதடுமாற வைக்கின்றது. ஏதோ எண்ணங்கள் உன்னில் வட்டம் இட்டபடி சுற்றிக் கொண்டு இருக்கிறது.உன் மனநிலை அழகிய கோலங்களாய் இருந்த நிகழ்வை தாண்டி இன்று உன்னை நீயே வெறுக்கும் அளவிற்கு அலங்கோலமாய் உன்னை படுத்தி எடுக்கிறது.புத்தியும் மனமும் நேராக இருந்தால் தான் எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாகும் நாம் செய்கின்ற காரியத்தின் அசைவுகள் என்னவென்று புலப்படும்.


உன் சாய்அப்பாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் அருளை பெறுவாய்.அதனால், நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்றதீபத்தை நான் ஏற்றுவேன்.உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் நான் உன்னை விட்டு ஒருபோதும் அகல மாட்டேன் உன்னில் எப்போதும் இருப்பேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்…ஓம் ஸ்ரீ சாய் ராம்…ஓம் ஸ்ரீ சாய் ராம்…