இன்றைய ராசி பலன் – 03-07-2021

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். தடைப்பட்ட சில முயற்சிகளுக்கு சிறந்த பலனை காண்பீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் எதுவும் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு இலாபம் கிடைத்தது சில இடையூறுகள் ஏற்படலாம். எனினும் பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு குடும்பத்தினர் அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமையும். விட்டு சென்ற சில உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் நல்ல ஏற்றம் இருக்கும். எனினும் கூடுதல் உத்திகளை பயன்படுத்தி முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். ஆரோக்கியம் கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். நீண்டநாள் முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சில மாற்றங்களை சந்திக்க இருக்கிறீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உரிய ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சி மற்றவர்களை வியப்படையச் செய்யும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் கதவை தட்டும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.