பாடசாலைகள் இந்த மாதம் மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகள் இந்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ் முதல் கட்டமாக 100 க்கும் குறைவான மாணவர்களுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,962 பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.