கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழப்பாண மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவிப்பு வரை நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவையை தவிர்த்து, வேறு நடவடிக்கைகளுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.