இலங்கையில் தொடர்ந்து எகிறும் கொரோனா..!! 718 ஐ எட்டிய மொத்த எண்ணிக்கை..!!

நேற்று (3) நாட்டில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 517 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏழு பேர் இறந்துள்ளனர், 184 பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.இன்று மே 4 ஆம் திகதி காலை 6 மணி வரையான நிலவரப்படி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 527 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.அத்துடன் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதுவரை 184 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.