புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டு தற்கொலை!

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று(1) பதிவாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தினை சேர்ந்த சாயன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் கவலரனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியினை எடுத்து தனக்கு தானே தலையில் அவர் சுட்டுக்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.